நலம் தரும் நவராத்திரி விழா

2023-10-18 19:04:19
கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் ‘நலம் தரும் நவராத்திரி விழா’ வெகு சிறப்பாக கொள்ளுப்பிட்டி பகத்தல வீதியில் அமைந்துள்ள அன்பு இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) மன்றத்தலைவி பத்மினி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை வசந்தகௌரி விமலேந்திரன், குமுதரஞ்சனி நந்தகுமார், கௌசல்யா முருகதாஸ், பத்மா குணரட்னம், கலா மயில்வாகனன் ஆகியோர் ஒழுங்கமைப்பு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வினை அரம்பித்த செல்வி. பிரசாந்தி ராஜ்குமார் தேவாரங்களைப் பாடினார். சசிதேவி நீலகண்டன் பஜன் மற்றும் பாடல்களையும், சகுந்தலா குமாரசிங்கம் சகலகலாவல்லிமாலையையும் பாடினர்.

வானதி காண்டீபன் ‘மாநிலம் பயனுற வாழ்க’ என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
தொடர்ந்து ஒன்பது மன்ற உறுப்பினர்கள் வேப்பிலையால் வேப்பிலைகாரிக்கு 108 அம்மன் துதி பாடி அர்ச்சனை செய்தனர். அடுத்து, சகலகலாவல்லி பாமாலை பாடப்பட்டது.

இதன்போது நலம் தரும் நவராத்திரி பூஜை எனும் பெயரில் விசேட நூல் ஒன்றும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.நிகழ்வின் இறுதியில் தனது இனிய குரலினால் செல்வி. வைஷாலி யோகராஜன் பாடல்களைப் பாடி சபையோரை மகிழ்வித்தார்.

(படங்கள் : எஸ்.எம்.சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right