மட்டக்களப்பு கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை அதிபர் சி. அரசரெட்டினம் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) சிறப்பாக இடம்பெற்றது .
இதில் பிரதமஅதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் எ.அரவிந்தகுமார், கௌரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் ஜி.அருணன், கல்குடா வலய கல்வி பணிப்பாளர் ரி.அனந்தரூபன், வாகரை வடக்கு கோட்டகல்வி பணிப்பாளர், மற்றும் பாதுகாப்பு அதிகரிகள், ஆசிரியர்கள்,பெற்றேர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அதிதிகள் வரவேற்பு, கொடியேற்றுதல்,மங்கல விளக்கேற்றல், கலை நிகழ்வுகள், நூற்றாண்டு விழா 'கதிராழி' சஞ்சிகை வெளியீடு ,சேவை நலன் பாராட்டுக்கள், அதிதிகள் உரை என்பன இடம்பெற்றன.
இதன்போது பாடசாலையில் சாதாரண, உயர்தர பரீட்சைகள் மற்றும் 5ஆம் தர புலமை பரீட்சையிலும் சித்தி அடைந்து சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் சின்னங்களும் பதக்கங்களையும், மற்றும் கல்லூரி தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட உதைபந்து, கரப்பந்து, எல்லே மற்றும் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பதக்கங்களும் வெற்றிக்கிண்ணங்களையும் அதில் கலந்துகொண்ட அதிதிகள் வழங்கிவைத்து கௌரவித்தனர்
- முகப்பு
- Photo Galleries
- மட்டு கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலய நூற்றாண்டு விழா
மட்டு கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலய நூற்றாண்டு விழா
2023-07-27 15:26:38









-
சிறப்புக் கட்டுரை
ஜே. ஆரும் ரணிலும்
29 Sep, 2023 | 11:36 AM
-
சிறப்புக் கட்டுரை
இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட்...
26 Sep, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - பைடன் கலந்துரையாடல் இல்லாதது...
24 Sep, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்...
22 Sep, 2023 | 03:57 PM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலும்
21 Sep, 2023 | 03:27 PM
-
சிறப்புக் கட்டுரை
பிரதமரை சந்தித்து அரசியல் வியூகத்தை கூறிய...
17 Sep, 2023 | 05:16 PM
மேலும் வாசிக்க