‘கச்சேரி மேளா – 2’ நிகழ்வு

2023-07-21 15:00:41
அபிநயஷேத்ரா நடனப்பள்ளி , இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு, சுவாமி விவேகானந்த இந்திய கலாசார நிலையத்துடன் இணைந்து வழங்கும் ‘கச்சேரி மேளா – 2’ நிகழ்வு 13ஆம் திகதி வியாழக்கிழமை நிலையத்தில் நடைபெற்றது.
ஆடல் ஆற்றுகைத் தளத்தினை அமைத்து சம்பிரதாயமான கலாசூரி திவ்யா சுஜேன் முன்னெடுக்கும் இந்நிகழ்வில் இம்முறை ‘நாட்டிய சூரத்’. ஜெகநாதன் சஞ்ஜீவன் ஆற்றுகை வழங்கினார்
இந்நிகழ்விற்கு உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களான திருமதி. சுமித்ரா சுகேந்ரா (இயக்குனர் கலாகேந்ரா நடனப்பள்ளி, டென்மார்க்), திருமதி மைதிலி ரவீந்திரா (இயக்குனர், பரத நர்த்தனாலயம், நோர்வே) ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
ஜெகநாதன் சஞ்ஜீவன், திருமதி திலகா மகேஸ்வரன் அவர்களிடம் நடனம் பயின்றதோடு, பரதநாட்டிய பட்டையக் கற்கைநெறியையும், அபிநயஷேத்ராவின் நட்டுவாங்கப் பட்டையக் கற்கைநெறியையும் பயின்று, கைலேஸ்வரம் நடனப்பள்ளியினை ஆரம்பித்து நடாத்திவருகிறார்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right