கல்முனையில் ‘காணிக்கு குருநாதன்’ நூல் வெளியீடு

2023-07-20 16:16:14
மருதமுனையை சேர்ந்த காணி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.றஜாய் எழுதிய, கிழக்கு மாகாண காணி ஆணையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற கதிர்காமத்தம்பி குருநாதன் அவர்களின் அரச சேவையையும் வாழ்க்கை வரலாற்றையும் கூறும் ‘காணிக்கு குருநாதன்’ எனும் நூல் கல்முனை கிறிஸ்டா இல்ல மண்டபத்தில் (16) வெளியீட்டு வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட தலைமைக் காரியாலய காணி உத்தியோகத்தர் கே.எல்.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயல்களிலும் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது குருநாதன் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் நூலாசிரியர் றஜாய் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி கல்லடி உப்போடையில் பிறந்த கதிர்காமத்தம்பி குருநாதன் அவர்களின் 34 வருட அரச சேவைகள் மற்றும் அவரது வாழ்க்கை பயணத்தின் படிக்கற்கள், அறுவடைகள் போன்ற பல்வேறு படிமங்களை தாங்கியதாக ‘காணிக்கை குருநாதன்’ எனும் இந்நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right