சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வருட காலம் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளிவீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வருடத்தை கழித்த அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்கொட் கெல்லியும் ரஷ்ய விண்வெளி வீரரான மிகெயில் கொர்னியன்கோவும் சொயுஸ் விண்கலத்தின் மூலம் நேற்று புதன்கிழமை கஸகஸ்தானிலுள்ள ஸெஸ்கஸ்கன் பிராந்தியத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளனர்.