சவால்களை சமாளித்து கால்பந்தாட்டத்தை மேம்படுத்த முடியும் - புதிய பயிற்றுநர் மொறிசன் நம்பிக்கை
இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சி அளித்து அதனை முன்னேறச் செய்வது ஒரு பெரிய சவால் என்றும் அந்த சவாலை சமாளித்து கால்பந்தாட்டத்தை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இலங்கை தேசிய அணியின் புதிய பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ள அண்ட்றூ மொறிசன் தெரிவித்தார்.