சமரி அத்தப்பத்துவின் அதிரடியில் இந்திய மகளிர் அணியை வெற்றிகொண்டது இலங்கை மகளிர் அணி
இந்தியாவுக்கு எதிராக ரங்கிரி, தம்புளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (27) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தப்பத்துவின் அபார துடுப்பாட்ட உதவியுடன் இலங்கை 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.