மன்னாரில் தற்காலிக வியாபார நிலையங்கள்
நத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் 298 தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தெரிவித்தார்.