“அரசியல் மாற்றத்தால் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லை”
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பொருளாதாரத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. 'மூடி'யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று நாட்டின் கடன் மீளச் செலுத்தும் ஆற்றலில் வீழ்ச்சி நிலை ஏற்படவில்லை எனவும் சர்வதேசத்துக்கு மீள செலுத்த வேண்டிய கடன்தொகையை விடவும் மேலதிக நிதி அரசிடம் உள்ளது எனவும் பொருளாதார சபையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரக்கோன் தெரிவித்தார்.