“ சிங்கள மக்களை ஏமாற்றவே ஈழம், முஸ்லிம் விவாகச் சட்டடம் போன்ற சொற் பதங்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது”
முஸ்லிம் விவாக சட்டடம், ஈழம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தேசியவாதிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மௌனம் காப்பது வேடிக்கையானது. ஈழம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி அரசாங்கம் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது. தேசப்பற்று என்பது வெறும் தேர்தல் கால பிரசாரமாகவே காணப்படுகிறது என முன்னிலை சோசலிச கட்சியின் ஒருங்கினைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.