நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தர் சிலை ; பொதுஜன பெரமுன மீதான தமிழ் மக்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது - சிவநேசன்
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய விகாரையில் கடந்த 30ஆம் திகதி மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை ஒன்று பாணந்துறை பிரதேசத்திலிருந்து வந்த அசங்க சாமர என்பவர் தலைமையிலான குழுவினரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விடயம் பொதுஜன பெரமுனவின் ஆட்சி குறித்து தமிழ் மக்களின் அச்ச உணர்வை நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.