பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு எதிராக வழக்குத் தொடுப்பேன் - முன்னாள் அமைச்சர் தயா கமகே
மக்கள் வங்கியில் இருந்து 3பில்லியன் கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்ததுடன் அந்த கடன் தொகையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் என்மீது பொய் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கின்றார்.