ஆசிரியை காதலை நிராகரித்ததால் நிர்வாணமாக வீதியில் உருண்ட மாணவர்
காதலர் தினத்தையொட்டி ஆசிரியை ஒருவரிடம் தனது காதலைத் தெரிவித்து நிராகரிப்புக்குள்ளான பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடுவீதியில் அரை மணி நிர்வாணமாக உருண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு சீனாவில் ஜினான் நகரிலுள்ள வாங்குவான்ஸுவாங் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.