ஆயிரம் ரூபாவும் அதிர்ஷ்டமில்லாத மக்களும்
இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு 2015 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிய சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற சம்பவத்தை எவருமே மறந்திருக்க முடியாது. ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை கம்பனிகள் கொடுத்தாலே புதிய கூட்டு ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திடுவேன் என ஊடகங்களின் முன்பாக முழக்கமிட்டார் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான்.