போருக்கு பின்னதான தசாப்தத்தில் மிகப்பெரிய தேர்தல் சவாலை எதிர்நோக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
இலங்கை ஆகஸ்ட் 5 பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகியிருக்கும் நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான அரசியல் அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தசாப்தத்துக்கு முன்னர் முடிவடைந்த உள்நாட்டுப்போருக்கு பிறகு அதன் வாக்காளர்கள் மத்தியில் இதுவரையில் சந்தித்திராத மிகப்பெரிய சவாலுக்கு முகம்கொடுக்கிறது.