300 MDRT தகைமையாளர்களை பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்
இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி, இலங்கையின் காப்புறுதி வரலாற்றில் இதுவரை பதிவாகியிருந்த ஆகக்கூடிய MDRT தகைமையாளர்கள் எண்ணிக்கையான 300 பேரை பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 74 சதவீத அதிகரிப்பாகும்.