(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை மீது மேலும் அழுத்தம் பிரயோகிகக் கூடிய வகையிலேயே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஜனாதிபதியால் அண்மையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அநுராதபுரத்தில் அமைந்துள்ள டி.எஸ்.குணசேகர என்ற நிறுவனத்தின் ஊடாக ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானோரால் செய்யப்பட்டுள்ள மோசடிகள் குறித்த ஆதாரங்கள் எமக்கு கிடைத்துள்ளன. இந்த நிறுவனத்திற்கு 3.1 பில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ள போதிலும் அந்த கடன் தொகை உரிய நேரத்தில் மீள செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரச வங்கிகள் பாரிய நஷ்டமடைந்துள்ள போதிலும் ராஜபக்ஷ குடும்பத்தினர் இலாபமீட்டிக் கொண்டுள்ளனர். அநாவசியமாக விடயங்களுக்கு ஆணைக்குழுக்கள் அமைப்பதை விட இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது மேலும் மேலும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலேயே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும். ஆணைக்குழுக்கள் ஊடாக மக்களிவ் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.  தெரிந்து கொண்டே மீண்டும் தவறிழைக்கின்றனர். லசந்த விக்கிரமதுங்க , வசீம் தாஜூடீன் உள்ளிட்டோல் கொல்லக்கப்பட்டுள்ள பிரகீத் எக்னலி கொட காணாமலாக்கப்பட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் மறக்கப்படா முடியாதவை என்றார்.