(லியோ நிரோஷ தர்ஷன்)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் எவ்விதமான கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுப்பட வில்லை. முன்னாள் போராளிகள் புற்று நோயாலோ அல்லது மர்மமான முறையில் உயிரிழப்பதாயின் அது தொடர்பில் புனர்வாழ்வு அமைச்சும் அதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுமே செயற்பட வேண்டும். இதில் பாதுகாப்பு அமைச்சிக்கு எவ்விதமான பங்கும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் திடீர்  மரணங்கள் தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.