நடிகர் சூர்யா நேற்று ஞாயிற்றுக்கிழமை தாமதமாக தான் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்துள்ளதாவது,

’கொரோனா’  பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.

சூர்யா இந்த மாதம் இயக்குனர் பாண்டிராஜுடன் தனது வரவிருக்கும் படத்தின் வேலைகளைத் தொடங்கவிருந்தார். எனினும் தற்சமயம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததால் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்படவுள்ளது.