தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பிரதேசங்கள் இன்று அதிகாலை 5.00 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கீழ் காணும் பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

01. பொரளை பொலிஸ் பிரிவு

  • கோதமிபுர அடுக்குமாடிக் குடியிருப்பு
  • கோதமிபுர 24 ஆம் தோட்டம்
  • கோதமிபுர 78 ஆம் தோட்டம்
  • வேலுவன வீதி (தெமட்டகொட)

02. பூகொட பொலிஸ் பிரிவு

  • குமாரிமுல்ல கிராம அலுவலர் பிரிவு

03. மினுவாங்கொட பொலிஸ் பிரிவு - கல்ஒழுவ பிரதேசம்

  • ஜூம்மா பள்ளிவாசல் வீதி
  • ஹித்ரா வீதி
  • புதிய வீதி
  • அகரகொட

 

04.அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவு

  • போலான தெற்கு