வவுனியா நகரசபை ஊழியரொருவர் சத்தியாக்கிரக போராட்டம்

By T Yuwaraj

07 Feb, 2021 | 10:02 PM
image

வவுனியா நகரசபையின் ஊழியர் ஒருவர் நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கடந்த 13நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். 

வவுனியா நகரசபையின் பொது நூலகத்தில் பணியாற்றி வந்த க.கோல்டன் என்ற நூலக பணியாளரே தனக்கு நகரசபை நிர்வாகம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 20 வருடங்களாக பொதுநூலகத்தில் பணியாற்றி வருகின்றேன், நான் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்தகாலத்தில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தேன் இதன் காரணமாக என்னை பழிவாங்கும் முகமாக எனக்கு நகரசபை நிர்வாகத்தினரால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனது பணியினை இடைநிறுத்தி என்னை நகரசபை பூங்காவில் சுத்திகரிப்பு பணியில் நகரசபை நிர்வாகம் அமர்த்தியுள்ளது. இதன் காரணமாக எனது பணியின் முன் அனுபவ காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

நகரசபை நிர்வாகம் என்னை பழிவாங்குவதை நிறுத்தி எனக்கு மீண்டும் நூலகத்தில் பணி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இப் போராட்டம் தொடர்பாக நகரசபை நிர்வாகத்திடம் கேட்டபோது குறித்த பணியாளரின் நியமனம் தொடர்பான வேலையே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சுழற்சி முறையில் பணியினை மாற்றி வழங்கும் முகமாகவே பணிமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அப்பணியாளருக்கு எங்களால் அநீதி இழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தனியாக போராடி வந்த நகரசபை பணியாளர் க.கோல்டனுக்கு ஆதரவு தெரிவித்து சக தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளதுடன், இரவு பகலாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில்...

2022-10-05 16:48:48
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு கடும் பாதுகாப்பு...

2022-10-05 21:37:06
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12