கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றில் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கொவிட் 19 கட்டுப்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Image result for தனிமைப்படுத்தல் virakesari

அதன் படி குறித்த பகுதிகள் நாளை 8 ஆம் திகதி காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனர் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோதமிபுர தொடர் மாடி குடியிருப்பு, கோதமிபுர 24 ஆம் இலக்க தோட்டம், கோதமிபுர 78 ஆம் இலக்க தோட்டம், தெமட்டகொட வேலுவன வீதி ஆகியன விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன் பூகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிமுல்ல கிராம சேவகர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் கல்லொழுவ பிரதேசத்தின் ஜும்மா பள்ளிவாசல் வீதி, ஹித்ரா வீதி, புதிய வீதி, அகரகொட பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

மேலும் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவின் போலான தெற்கு பகுதியும் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.