(எம்.மனோசித்ரா)
அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு முஸ்லிம் மக்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு 2 மில்லியன் ரூபா வென்றுள்ள பாடசாலை மாணவி ஷுக்ராவை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார், காலி பிரதேசத்திற்கு சென்றிருந்த அவருக்கு அப்பிரதேச வாழ் முஸ்லிம் மக்களால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இதன் போதே அவர் மாணவி ஷுக்ராவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு முஸ்லிம் மக்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.