ஈழ தமிழரின் எழுச்சி என்பது வரலாற்று அரசியல் கால கட்டத்தில் இன்றியமையாதது என அருட்தந்தை எஸ்.செபமாலை அடிகளார் தெரிவித்தார். 

நேற்று சனிக்கழமை (6) மதியம் பொத்துவில் தொடக்கம்  பொலிகண்டி வரையான தமிழர் பேரணி -மன்னார் நகரை வந்தடைந்தது. இதன் போது வாசிக்கப்பட்ட அறிக்கையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார்.-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், வடகிழக்கு மாகாணங்களில் சிவில் அமைப்புக்கள் முன்னெடுக்கும் போராட்டமானது, 2009 ஆண்டு ஆயுதம் மௌனிக்கப்பட்ட  பின்னர் வடக்கு கிழக்கு தமிழர்  தாயக பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஈழ  படுகொலையை முன்னிறுத்தியும் , தமிழின படுகொலைக்கு நீதி வேண்டியும் முஸ்லிம், மலையக ,ஈழ தமிழரின் கூட்டிருமையை வலியுறுத்தியும் நீதிக்கான பேரணி நான்காவது நாளாக மன்னாரில் வந்தடைந்துள்ளது.

சிங்கள அரசு, சிறிலங்காவை சிங்கள பௌத்த ஒருமை பண்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான காலணித்துவ செயற்பாடுகளை வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் அரசியல் நிகழ்ச்சி திட்டத்தினூடும், அரசு இயந்திரத்தினோடும் நிரல் படுத்தியும் செயல்படுத்தியும் வருகின்றது.

ஈழ தமிழர் இருப்பை உறுதி செய்தல். சிறிலங்கா சிங்கள பௌத்தர்களுக்கு  மாத்திரம்  உரித்தானது அல்ல என்று கூறிக்கொள்வதோடு,  தம்மை எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களின் நாடு என்று கூறிக்கொள்வதோடு இதனை வலியுறுத்திக் கொள்கின்றோம்.