தொடர் போராட்டத்திற்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கம்

By T Yuwaraj

07 Feb, 2021 | 05:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரயில் சேவை இவ்வாரம் முதல் மட்டுப்படுத்தப்படும். ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ரயில்வே திணைக்களம் விரைவில் தீர்வு வழங்காவிடின் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானிப்போம் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமவடு தெரிவித்தார்.

மருதானையில் உள்ள ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரயில் சேவையில் 1000ற்கும் மேற்பட்ட தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. வெற்றிடங்களுக்கு  சேவையாளர்களை இணைத்துக் கொள்ள ரயில்வே திணைக்களம் இதுவரையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

4000 ஆயிரம் கனிஷ்ட ஊழியர்களுக்கான வெற்றிடமும்,250 ரயில் நிலைய பொறுப்பதிகாரி   சேவையிலும் வெற்றிடம் நிலவுகிறது.

ரயில் போக்குவரத்து சேவையில் சமிக்ஞை காட்டுபவர்களின் சேவையிலும் வெற்றிடம் நிலவுகிறது. சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றவர்கள் சமிஞ்சை காட்டுபவர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு 6 மாத காலமாக சம்பளம் வழங்காத காரணத்தினால் இவர்கள் நாளை முதல் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்கள்.

ரயில் நிலையத்தில் மூன்று மொழிகளிலும் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என அரச கரும மொழிகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஆனால் சிங்கள மொழியில்  மாத்திரமே அறிவித்தல் விடுக்கப்படுகின்றன. இச்சேவையிலும் 100 வெற்றிடங்களும், ரயில் நிலைய சுகாதார சேவையாளர் சேவையில் 320 வெற்றிடங்களும் நிலகின்றன.

சேவையாளர்களின் பற்றாக்குறையுடன் ரயில் சேவை முன்னெடுக்கப்படுகின்றன. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பலர் சேவையில் இருந்து விலகியுள்ளார்கள். அதனால் இவ்வாரம் முதல் ரயில் சேவைகள் பெரும்பாலும் மட்டுப்படுத்தப்படும்.

ரயில் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு சேவையாளர்களை விரைவாக இணைத்துக் கொள்ள ரயில்வே திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இல்லாவிடின் ரயில்  நிலைய பொறுப்பதிகாரிகள்  தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருந்து பற்றாக்குறை - சத்திரகிசிச்சைகள் -...

2022-10-02 11:10:45
news-image

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம்...

2022-10-02 10:54:26
news-image

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள்...

2022-10-02 10:53:50
news-image

கட்டணங்களை குறைக்கப்போவதில்லை - முச்சக்கர வண்டி...

2022-10-02 10:42:55
news-image

ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ...

2022-10-02 10:50:47
news-image

துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த பெண்...

2022-10-02 10:01:52
news-image

இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ்...

2022-10-02 09:52:28
news-image

மக்கள் சார்பற்ற பொருளாதாரக் கொள்கையை நோக்கிப்...

2022-10-01 21:41:48
news-image

ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை...

2022-10-01 20:34:56
news-image

பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றது...

2022-10-01 20:31:09
news-image

100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில்...

2022-10-01 12:41:43
news-image

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்து...

2022-10-01 20:29:19