முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட பதவியில் அமர்த்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்தவித ஆட்சேபனைகளும் இருக்கவில்லை என சமூக வலுவூட்டள் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

செத்சிறிபாயவில் அமைந்துள்ள சமூக வலுவூட்டள் மற்றும் நலன்புரி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.