தடுத்துவைக்கப்பட்டுள்ள வளர்ப்பு யானைகளை விடுவிக்கும் வரை கண்டி பெரஹராவிற்கு யானைகளை அனுமதிக்கப் போவதில்லை என யானை வளர்ப் போர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரைக்கும் 39 யானைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதமாகவும் அவற்றை விடுவிக்கும்படி யானை வளர்ப்போர் சங்கத்தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்தார். 

தற்போது 30 யானைகள் மட்டுமே பெரஹராவில் ஈடுபடுத்தப்படுவதாகவும்  இப்பிரச்சினையைத் தீர்க்க சம்பந்தப்பட்டோர் உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் இது தொடர்பாக தற்போது பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.