பிலிப்பைன்ஸின்டாவோ டெல் சுர் மாகாணத்தில் இன்று 6.3 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.22 மணிக்கு ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் நில அதிர்வு மற்றும் எரிமலை (Phivolcs) நிறுவனம்  தெரிவித்துள்ளது. 

மாக்சேசே நகரிலிருந்து தென்கிழக்கில் 6 கி.மீ தொலைவில் 15 மீற்றர் ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" உடன் அமைந்துள்ளதால் பிலிப்பைன்ஸ் அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளைக் எதிர்கொள்கிறது.