பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பம்

By J.G.Stephan

07 Feb, 2021 | 10:39 AM
image

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான  மாபெரும் பேரணியானது இன்று (07.02.2021)காலை கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பித்து பொலிகண்டி நோக்கி பயணம் ஆரம்பமாகியுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் போராட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள்,  வாகன ஊர்வலம் என எதனையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும், இது நீதிமன்ற கட்டளை எனவும் பொலிஸார் அறிவித்துக்கொண்டிருக்க, மறுபுறம் பேரணி நடந்துகொண்டிருந்தது.

இப்பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பயங்கரவாத  தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் சிறிது நேரம் நின்று , பின்னர் தொடர்ந்து பயணித்து.
 பெருமளவான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right