ஆயிரம் ரூபா சம்பளம் தொழிலாளர் கரம் கிட்டும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது

07 Feb, 2021 | 10:07 AM
image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் பாதுகாப்பு அரண் என்பதை இந்திய வம்சாவளி வழி வந்த இன்றைய மலையக சமூகம் மீண்டும் நிரூப்பித்துள்ளது.

தென் இந்திய மாநிலத்திலிருந்து இலங்கைக்கு பொருந்தோட்ட பகுதிகளுக்கு இன்றைய மலையக சமூகத்தினர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை காலணித்துவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்த காலப்பகுதியில் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட காலம் முதல் தோட்ட தொழிலாளர் சமூகம் சொல்ல முடியா துயரங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இவ்வாறான நிலையில் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் காடுகளை களனியாக்கி பெருந்தோட்ட பயிர்களில் ஒன்றான கோப்பில் உள்ளிட்ட வாசனை பயிர்களை பயிரிட்டு அதனூடாக இந்த தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்திருந்த போதும் இவர்கள் அக்காலத்தில் பட்ட துன்பங்கள் இன்று கதையாகவும், வரலாறாகவும் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில் மலையக பிரதேசங்களில் தேயிலை பயிரிடப்பட்ட பின் இலங்கையில் காலணித்துவ அடக்குமுறை, அடிமைத்தனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது சுய உரிமையை கூட அனுபவிக்க முடியாத துர்பாக்கிய நிலைக்கு வந்திருந்ததும் மறக்கவும் மறுக்கவும் முடியாத சம்பவங்களில் ஒன்றாகும்.

பின் நாடும், நாட்டு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த பின் அரசாங்கம் என்று ஒன்று உருவெடுத்த பின் அடிமைத்தனம், அடக்குமுறைகளில் இருந்து விடுப்பட்ட நாட்டு மக்களில் பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்திற்கு மாத்திரம் விடிவு பிறக்காத நிலையில் தொடர்ந்திருந்தது.

இவ்வாறான காலப்பகுதியில் பெருந்தோட்ட சமூகத்திற்கும் விடிவு பிறக்க வேண்டும் என்பதில் இந்த சமூகத்தை சார்ந்த தலைவர்கள் பாடுப்பட்டு வந்தனர். இவ்வாறு பெருந்தோட்ட தொழிலாளர்களின் விடிவுக்காக பாடுப்பட்ட தலைவர்களில் மலையக தந்தை என போற்றப்பட்ட இரும்பு மனிதர் சௌமிய மூர்த்தி தொண்டமானும் ஒருவராவார். இவரை மலையக மக்களின் பாதுகாவலராக ஏற்றுக்கொண்ட காலப்பகுதி இன்றும் பேசப்படுகிறது.

இவரின் காலத்தில் பெருந்தோட்ட தொழில் துறையில் மங்காது சிறந்து விளங்கி வருகின்ற தேயிலை துறை தொழிலில் அதிகமாக ஈடுபாடு கொண்ட இந்திய வம்சாவளிகளான தோட்ட தொழிலாளர்கள் அரசாங்க பொறுப்பில் உள்ள தோட்டங்களின் தொழிலாளர்களாக இருந்து வந்த வரலாறும் மாறவில்லை.

காலப்போக்கில் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்த நாட்டில் உரிமை வேண்டும், வாழ்வாதாரத்திற்கு அவர்கள் நம்பியிருக்கும் தேயிலைத் தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும், தொழிலாளர்கள் வெள்ளையர் காலத்தில் வாழ்ந்துவந்த குடியிருப்பு உள்ளிட்ட வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும், பாமரவாழ்க்கை ஒழிக்கப்பட்டு கல்வி கற்ற சமூகமாக பரிமாண வளர்ச்சிக்கு இவர்களை அழைத்து செல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன் போது கட்சிகள் உருவாகியது தலைவர்களும் உருவாகினார்கள் அவ்வாறு உருவாகிய கட்சிகளில் ஒன்றுதான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதன் ஸ்தாபன தலைவர் தான் சௌமிய மூர்த்தி தொண்டமான்.

இது தவிர இன்னும் பல கட்சிகளும் காணப்பட்டன. தலைவர்களும் காணப்பட்டனர். இருந்த போதிலும் மலையக இந்திய வம்சாவளி மக்களின் பெரும் கட்சியாகவும் தோட்ட தொழிளாலர்களின் கட்சியாகவும் ஏகோபித்த அமைப்பாகவும் மக்களால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறுகளும் இன்றும் மறைந்து போகவும்மில்லை மறக்கவும் முடியாது.

இவ்றான நிலையில் அரசாங்க காலத்தில் தோட்டப்பகுதிகளில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும், அவர்களுக்கான தேவைகள் உள்ளிட்ட உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதில் இந்த தொழிலாளர்களை பாதுகாத்து வந்த கட்சிகளில் பெரும் பங்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற மகா அமைப்பின் பங்களிப்பே அதிகமாக காணப்பட்டது.

காரணம் அன்று தோட்ட தொழிலாளர்கள் ஒற்றுமையை கடைப்பிடித்து ஒரு கட்சியின் கீழ் இயங்கி பலத்தை நிரூபிக்க சக்தியாக செயற்பட்டனர். இக்காலப்பகுதியில் அரசாங்கத்தில் பெருந்தோட்ட மக்களின் பாதுகாவலராக சௌமிய மூர்த்தி தொண்டமான் பாராளுமன்றம் சென்று உறுப்பினராகவும் பின் அமைச்சராகவும் இருந்து இந்த தொழிலாளர் சமூகத்தையும் இந்திய வம்சாவளி ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாத்து வந்தார்.

இக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் ஊடாக தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைகள் ,வாழ்க்கை மாற்றத்திற்கான புதிய பரிமாணங்கள் என கற்ற சமூகமாகவும் அரச தொழில்களில் ஈடுபடும் சமூகமாகவும் விளங்க அதிகூடிய கவனத்துடன் இந்நாட்டு பிரஜைகள் என்ற அந்தஸ்தையும் பெற்றுத்தந்த தலைவராக இவர் விளங்கினார்.

பின் அரசாங்க பொறுப்பில் பெருந்தோட்ட தேயிலைத்துறை நடத்தப்பட்ட போதே தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு கூட்டு ஒப்பந்தம் முறையும் கொண்டுவரப்பட்டு அதனூடாக சம்பள உயர்வு வழிகாட்டியாக திகழ்ந்த பெருமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உண்டு.

உலக தொழிலாளர் சம்மேளனத்தில் அங்கத்துவ தொழிற்சங்கமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அந்தஸ்த்து பெற்றிருந்த காலத்தில் இரண்டாவது தொழிற்சங்கமாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு கமிட்டி தொழிற்சங்கமும் அந்தஸ்த்து பெற்று தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் உள்ளிட்ட நலன் புரி சார்ந்த விடயங்கள் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தது.

அது இன்றும் நடைமுறையில் காணப்படுகிறது. காலப் போக்கில் பெருந்தோட்ட தொழில் துறையை அரசாங்கம் கைவிட்டு அதன் பராமரிப்பை குத்தகை அடிப்படையில் வழங்க அரசு கம்பனிகளின் பொறுப்பிற்க்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அந்தஸ்த்து கொண்ட தொழிற்சங்கங்கள் அரசுடன் இணைந்து கம்பனிகளின் பாராமரிப்பிற்கு தோட்டங்களை சக தரப்புக்களின் குரல்கலுக்கும் மதிப்பளித்து வழங்கினர்.

அன்று முதல் இன்று வரை கம்பனிகளுக்கும் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் அரசாங்க தரப்பினை சாட்சியாக உள்வாங்கி சமரச பேச்சுக்களால் தொழிலாளர்களின் உரிமை சார் தொழில் விடயங்கள் உழைப்புக்கேற்ற ஊதிய உயர்வு என ஒப்பந்தம் செய்து வரப்படுகிறது.

காலப்போக்கில் கம்பனிகள் தொழிலாளர்களை தொழில் ரீதியாக வதைப்பதும் தொழில் உரிமைகளில் கைவைத்து தேயிலை தொழில் துறையில் இலபத்தை அதிகமக கம்பணிகள் அனுபவிக்கவும் அவர்கள் பாதிப்புக்களை உண்டுப்பண்னும் நிலையை தோற்றுவிட்டதும் மறக்க முடியாது.

ஆனால் இதை தொழிற்சங்கங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை மாறாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகமன கவனம் செலுத்தி கண்டித்தே வந்தனர்.இந்த நிலையில் சம்பளம் உள்ளிட்ட தொழிலாளர் உரிமை சார்ந்த விடயங்கள் பலவற்றுக்கு போராட்ட வெற்றிகளும் அதற்கு தொழிலாளர்களின் ஆதரவும் சமூகம் சார்ந்த ஒத்துழைப்பும் துணையாகவே இருந்து வந்துள்ளது.

இவ்வாறான காலம் கடந்ததில் பெரும் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அமரராகிய பின் மலையக சமூகத்தின் பாதுகாப்பை அமரர் ஆறுமுகம் தொண்டமான் கையேற்று அவரின் ஊடாகவும் பல்வேறு போராட்டங்கள் செய்யப்பட்டு நாட்டுரிமை பிரஜா உரிமை மற்றும் வாக்கு உரிமை போன்ற விடுப்பட்டிருந்த உரிமை களுடன் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான உரிமை விடயங்கள் கையாளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வாழ்க்கை செலவு பொருளாதார உயர்வு ரூபாவின் பெறுமதி உயர்வு உழைப்பின் ஊதிய உயர்வு என பல்வேறு உரிமைக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்றியமையாத செயற்பாடுகளுக்கு இவர் பாடுபட்டதுடன் தொழிலாளர் சமூகத்தின் அபிவிருத்தி பரிமாணங்கள் வளச்சிக்கும் பாடுப்பட்டார்.

இன்று தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைக்காக நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாவை அவர்களின் அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் என்பதும் அவரின் இறுதி மூச்சாகும். போராட்டத்திற்கு உள்ள சக்தி வேறு ஒன்றுக்கும் இல்லை என்ற வேதவாக்கை கொண்டு தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை போராடியேனும் பெற்றுக்கொடுக்கும் அந்தஸ்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காங்கிரசின் இலக்கு என்பதற்கு உன்னதமாக செயற்பட்ட அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவரின் காலத்தில் தோட்ட தொழிலாளர்கள் இன்று பெற்றுக்கொள்ளும் 700/=ரூபாவை அடிப்படை சம்பளத்தை கூட்டு ஒப்பந்தம் ஊடாக பெற்றிருந்தார்.

எத்தனை எதிர்ப்புகள் , போராட்டங்கள் அவைகளை எதிர்கொண்டு விட்டுகொடுப்புகள், தளராத பிடிகளை கையான்று சாணக்கிய வாதியாகவும் தைரியமாகவும் ஆளுமைமிக்க தலைவராகவும் ,அனைவரையும் பக்குவப்படுத்தி தொழிலாளர்களே உலகம் என தொழிலாளர்களின் உரிமைக்கும் உணர்விக்கும் மதிப்பளித்து உரிமைகளை பெற்றுக்கொடுத்ததை யாரும் மறந்துவிட முடியாது. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் வெவ்வேறு மாற்று கருத்துக்கள் கொள்கைகளை கொண்டிருந்த கால கட்டத்தில் அமரர் ஆறுமுகம் தொண்டமான் தொழிலாளர்களுக்கு கெஞ்சி கேட்பது பிச்சை, தட்டி கேட்பதே உரிமை என்ற தைரியத்தை ஊட்டி சம்பள விடயங்களை முன்னெடுத்து வந்தார்.

கடந்த ஆறு வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கை எட்டப்படாத நிலையில் 700/=ரூபாவை அடிப்படையாக்கியவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் ஆயிரமாகியிருக்கும் இது மக்கள் கூற்று.

இருப்பினும் சென்ற வருடம் 26/05/2020 அன்று இவரின் உடலைவிட்டு உயிர் பிரியும் முன்னர் இன்றைய பிதமரிடம் அவர் கடைசியாக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்காக பேசியுள்ளார்.

அன்று முதல் அரசாங்கமும் இந்த விடயத்தில் பின்வாங்கவில்லை. இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபக பொறுப்பில் அவரின் புதல்வர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தனது தந்தை காட்டியுள்ளது வழியில் அவரின் கனவை நிறைவேற்றும் இளம் தலைவராக தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் உரிமையை கையில் எடுத்துள்ளார்.

இவரின் கோரிக்கைக்கு அரசு தலை சாய்ந்துள்ளது, பல சுற்று பேச்சுவார்த்தைகளில் இவர் கம்பனிகளுடன் ஈடுபட்டு வரும் நிலையில் ஆயிரம் ரூபாவுக்கு இனங்காத கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.

அந்த வகையில் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வென்றே தீர்வேன் தந்தையின் கனவை நனவாக்குவேன் என்ற இலக்கு இவரிடத்தில் உண்டு. இதற்கு தொழிலாளர்களினதும் மலையக சமூகத்தின் மீது அக்கறை கொண்டோரையும் இணைந்து சமூகத்தின் ஒற்றுமையை வெளிக்கொணர வெள்ளிக்கிழமை போராட்டம் முழு அடைப்புக்கு அழைப்பு கொடுத்து அனைவரினதும் ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஒற்றுமை ஊடாக பெருந்தோட்ட கம்பனிகளை நடுங்க வைத்துள்ள போராட்டம் அமரர் ஆறுமுகம் தொண்டமான் தொண்டமான் இல்லாத நிலையிலும் அவரின் புதல்வர் தலைமைதாங்கி, மக்களின் ஆதரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு மாறாமல் உள்ளது என உணர்த்தியுள்ளார்.

அந்த வகையில் தொழிலாளர்களுக்கான உரிமை விடயத்தில் ஒற்றுமையை பரீட்சித்து பார்த்த கம்பனிகளுக்கு பாடம் படிபித்துள்ள அவர் சம்பள போச்சுவார்த்தைக்கு வலு சேர்த்து சக்தியையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொழிலாளர்கள் கரம் கிட்டும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27