இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் இரட்டை சதத்துடன் 555 ஓட்டங்களை குவித்துள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாள் முடிவில் சிறப்பாக விளையாடி 3 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களை எடுத்தது.
இந்நிலையில். இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரின் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் ஸ்டோக்ஸ் விரைவாக 82 ஓட்டங்களை அடித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரூட் 200 ஓட்டங்களை கடந்தார். 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 218 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்பு வந்த போப், ஜோஸ் பட்லர் ஆகியோர் முறையே 34, 38 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் டக் அவுட்டானார்.
இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ஓட்டங்களை எடுத்தது.
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஷபாஸ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ரோரி பேர்ன்ஸ் 33 ஓட்டங்களையும், டொமினிக் சிபிலி 87 ஓட்டங்களையும், டேனியல் லாரன்ஸ் டக்கவுட்டுடனும், ஜோ ரூட் 218 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்களையும், ஒல்லி போப் 34 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 30 ஓட்டங்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் டக்கவுட்டுடனும் ஆட்டமிழக்க, டொமினிக் பெஸ் 28 ஓட்டங்களுடனும், ஜாக் லீச் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM