பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி கிளிநொச்சியை சென்றடைந்தது

By T. Saranya

06 Feb, 2021 | 09:44 PM
image

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பயணம் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் சென்றடைந்தது.

கிளிநொச்சி டிப்புா சந்தியை சென்றடைந்த  குறித்த பேரணிக்கு கிளிநொச்சியி் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இரணைமடு சந்தியில் கூடிய ஆதரவாளர்கள் ஆமோக வரவேற்பளித்து பேரணியை வரவேற்றனர். குறித்த பேரணியின் இன்றைய பயணம் கிளிநொச்சி டிப்புா சந்தியில் 7.30 மணியளவில் நிறைவு பெற்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை அதே இடத்திலிருந்து பொலிகண்டிவரை பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டதத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் கைவிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right