அம்பாறை சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான விவசாயி அப்துல் ஹக்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக  அப்பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி ஆகிய இருவரை சந்தேகத்தில்  கைது செய்துள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபருக்கும் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும் தகாத உறவு காணப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்ததை தொடர்ந்தே சந்தேக நபர்களான பெண்ணும் அவரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் வேளாண்மை செய்கையை அறுவடை செய்வதற்காக சென்ற விவசாயி  6ம்  கொலனிப் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றின் கிணற்றுக்கு பக்கத்தில் உயிரிழந்த நிலையில் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

உயிரிழந்தவரின் சடலத்தை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் இஸ்மயில் பயாஸ் ரசாக் சென்று பார்வையிட்டு பிரதே பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது 

இதேவேளை உயிரிழந்தவர் 6 ம் கொலனிப் பகுதியில் பெண் ஒருவருடன் தொடர்பு உள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்ததையடுத்து அப் பெண்னையும் அவரது கணவனையும் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

இது தொடர்பாக மேலதிகவிசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்