நியாயத்தை எடுத்துரைக்க ஜெனிவாவில் இலங்கை இராணுவத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும்..!

Published By: J.G.Stephan

06 Feb, 2021 | 12:26 PM
image

(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் யுத்தக்குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தமது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க இம்முறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இலங்கை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை அடிப்படை தன்மையற்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் இடம் பெறவுள்ளது. இலங்கை தொடர்பில் ஐக்கிய  நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள தரப்பினர் தமது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இம்முறை அதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான காரியாலயத்தில் முன்வைத்துள்ளோம்.

இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது. பாதுகாப்பு சபையே நாடுகளுக்கு தடைவிதிக்கும். இலங்கைக்கு எதிராக சீனாவும், ரஷ்யாவும் ஒருபோதும் செயற்படாது. பலம் கொண்ட நாடுகளை கொண்டு சிறிய நாடுகளை அச்சுறுத்துவது ஐக்கிய நாடுகள் சபை தோற்ற கொள்கைக்கு முரணானது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு ஒருதலைப்பட்சமானது. இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லை என்று ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் இதுவரை இடம்பெற்ற கூட்டத்தொடர்களில் பேசப்படவில்லை. குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றதாக அனுமானிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்நிலைமை இம்முறை மாற்றியமைக்கப்படுவது அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17