1000 ரூபா சம்பளப் பேச்சுக்கான அழுத்தமாக இன்றைய போராட்டம் மாறும் - செந்தில் தொண்டமான்

Published By: Digital Desk 4

05 Feb, 2021 | 08:14 PM
image

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில், பெருந்தோட்டக் கம்பனிகள் கொண்டுள்ள சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக இன்று (05) முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி கண்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இதன்மூலம், பெருந்தோட்டக் கம்பனிகள் மீது தொழிலாளர்கள் கொண்டுள்ள அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க முன்வந்த, அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும்,  இதொகா சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

பொதுமக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை, அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் போது, அது பாரிய வெற்றிகாண்பதோடு, வரலாற்றிலும் இடம்பிடிக்கின்றன.

இவ்வாறானதொரு நிலையில், பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்து, மலையகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும், மாற்றுத் தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், அனைத்துத் தரப்பினருக்கும், மீண்டும் ஒருமுறை,  இதொகா சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பில், சம்பள நிர்ணய சபையில் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது, தொழிலாளர்கள்.  பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கு, இன்றைய இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம், பெரும் அழுத்தமாக அமையும் என்பது நிச்சயம்.

மீண்டுமொருமுறை, இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஒத்தழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும், இதொகா சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03