வட மாகாண சபையின் விவசாய அமைச்சின் கீழ் வரும் சில திணைக்களங்களை கிளிநொச்சி, மாங்குளத்திற்கு மாற்ற நடவடிக்கை

Published By: Gayathri

05 Feb, 2021 | 01:59 PM
image

(எம்.நியூட்டன்)

வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சின்கீழ் வரும் விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் வரும் காணித் திணைக்களம் என்பவற்றை மாங்குளம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு இடமாற்றுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் என வடக்கின் அனைத்து மாவட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆளுநர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விவசாய அமைச்சின்கீழ் வரும் விவசாயத் திணைக்களம் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் என்பவற்றை மாங்குளம் பகுதிக்கு இடமாற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதன்மூலம், அதிகளவு விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி நடைபெறும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் அதிக பயனடையக்கூடியதாக இருக்கும் என்று ஆளுநர்  தெரிவித்துள்ளார்

இதேபோல், உள்ளூராட்சி அமைச்சின்கீழ் வரும் மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் கிளிநொச்சிக்கு இடமாற்றப்படவிருப்பதாகக் தெரிவிக்கும் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அதிகளவு காணி தொடர்பான பிணக்குகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே காணப்படுவதால், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வசதியாக இந்த முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட காலம் முதல் அதன்கீழ் வரும் அனைத்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே செயற்பட்டு வருகின்றன. 

இதனால், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மாகாணசபை மூலமான தேவைகளை நிறைவேற்ற யாழ்ப்பாணத்துக்கே வரவேண்டியிருந்தது.

இப்போது ஆளுநர் சார்ள்ஸ் எடுத்திருக்கும் முடிவின்படி, வடக்கின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் மாகாணசபை நிர்வாகத்தை சம அளவில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

வடக்கு மாகாணசபை, வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் மையமாக விளங்கும்,மாங்குளம் பிரதேசத்திலேயே அமையவேண்டும் என்ற கோரிக்கை நீண்டாகலமாக பல தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று...

2023-12-10 13:00:20
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23