மகாவலி விவசாய சமூகத்தில் நச்சுப்பொருளற்ற விவசாயம் மற்றும் வினைத்திறன்மிக்க நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நீர்ப்பாசன முறைமையின் நிலையான பேணுகை எண்ணக்கருவை ஜனரஞ்சகப்படுத்தும் நோக்குடன் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்காக விருதுகள் மற்றும் பரிசில்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் ஆகஸ்ட்ம் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 “மகாவலி மகாகொவியா“ விருதுகள் மற்றும் பரிசில்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட உள்ளதோடு, வெற்றியாளர்கள் 104,000 மகாவலி விவசாயிகளிலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ளனர். 1007 விவசாய நிறுவனங்களுக்கு மத்தியில் இருந்து சிறந்த மகாவலி விவசாய நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டு இந்த நிகழ்வின்போது விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு எம்பிலிப்பிட்டியவில் உள்ள மகாவலி புத்தி மண்டபத்தில் நடைபெறும். 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மகாவலி அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய 2016ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்தவகையில் இப்போட்டி நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.