இருபதுக்கு - 20 உலக சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான இருபதுக்கு-20 போட்டித் தொடர் இம் மாத இறுதியில் ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் இரு போட்டிகளைக்கொண்ட இருபதுக்கு-20 தொடரே ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவே குறித்த போட்டித் தொடரை ஐக்கிய அமெரிக்காவில் நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.

குறித்த போட்டிகள் இம் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஃபோர்ட் லாடர்டலில் உள்ள  பிரோவர்ட் ஸ்டேடியத்தில் இடம்பெறவுள்ளது.