தேசியக் கொடிகளை குறைத்து பெளத்த, இராணுவ கொடிகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்

Published By: Digital Desk 4

04 Feb, 2021 | 09:37 PM
image

(ஆர்.யசி)

இராணுவ அணிவகுப்புகள், போர் வெற்றியை பறைசாற்றுகின்ற கோஷங்களுடன்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்க மண்டப வளாகத்தில் நடைபெற்று முடிந்தது. 

பிரதமர், அமைச்சர்கள், முப்படை பிரதானிகள், சர்வதேச இராஜதந்திரிகள் என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய கொடிகளை குறைத்து பெளத்த சிங்கள கொடிகளுடனும், இராணுவ கொடிகளுடனும் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு  இன்று காலை 7.15 மணிக்கு தேசபிதா டி.எஸ்.சேனாநாயகவின் உருவச்சிலைக்கு முன்னாள் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதிதிகளின் வருகை இடம்பெற்றது. முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு பிரதானி, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரது பரியார், பிரதம நீதியரசர் மற்றும் அவரது பரியார், சபாநாயகர் மற்றும் அவரது பரியார், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது பாரியார், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் அவரது பரியார் ஆகியோர் முறையே அதிதிகளாக வருகை தந்திருந்தனர். 

மேலும் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சின் செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள் என பலரும் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனை அடுத்து தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டதுடன், 45 பாடசாலை மாணவ, மாணவிகளினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களினால் ஜயமங்கள கீதம் பாடப்பட்டதுடன், நாட்டிற்காக உயிர் நீத்த சகல தேசாபிமானிகளுக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை வணக்கம் செலுத்தும் விதமாக 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

இதனை அடுத்தே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றின் மரியாதை அணிவகுப்புகளும் அதனை தொடர்ந்து கலாசார அனுவகுப்புகளும் இடம்பெற்றன.

இந்நிலையில் இன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே கொழும்பு சுதந்திர சதுக்க வளாகம் பலத்த பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட நிலையில் அப்பகுதியெங்கும் பெளத்த கொடிகளும், சௌபாக்கியத்தை வெளிப்படுத்தும் கடுஞ்சிவப்பு சிங்கள கொடிகளும், முப்படைகளின் ஒவ்வொரு படையணியையும் வெளிப்படுத்தும் இராணுவ கொடிகளும் அளவுக்கு அதிகமாக பறக்கவிடப்பட்டிருந்தன. இந்த கொடிகளுக்கு மத்தியில் ஆங்காங்கே இலங்கையின் தேசிய கொடிகளும் மிகக் குறைவாக பறந்ததையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக நேற்றைய சுதந்திர தின நிகழ்வுகள் மிகவும் கட்டுப்பாட்டுடன், சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இடம்பெற்றன.

ஒவ்வொரு சுதந்திரதின நிகழ்வுகளின் போதும் பொதுமக்கள் நிகழ்வுகளை பார்வையிட அழைக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும் இம்முறை  அவை அனைத்துமே நிறுத்தப்பட்டு வெறுமனே அதிதிகளுடன் மாத்திரம் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31