(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசிய பொருட்களின் விலையினை எதிர்வரும் 3 மாத காலத்துக்கு 27 நிலையான தன்மையில் பேணுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடந்த காலத்தை விட தற்போது அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட உணவு பொருட்களை நிவாரண விலையின் விற்பனை செய்ய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சில் நேற்று இடம் பெற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையினை நிலையாக பேண தனியார் துறையினர் முன்வந்துள்ளமை இதுவே முதற்தடவையாகும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து தரமான உணவு , மற்றும் அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 27 அத்தியாவசிய பொருட்களின் விலையினை எதிர்வரும் 3 மாத காலத்துக்கு நிலையாக பேண தேசிய உற்பத்தியாளர்கள், சிறு ஏற்றுமதி உற்பத்தியாளர்களுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கமைய எதிர்வரும் 3 மாத காலத்துக்கு சிவப்பு அரிசி,வெள்ளை அரிசி,வெள்ளை நாட்டரிசி, சம்பா, கீரி சம்பா, கோதுமை மா, வெள்ளை சீனி, சிவப்பு சீனி, தேயிலை தூள், சிவப்பு பருப்பு, பெரிய வெங்காயம்-இந்தியா, கடலை, உருளை கிழங்கு, உருளை கிழங்கு(பாக்கிஸ்தான்), உலர் மிளகாய், டின்மீன், நெத்தலி, கோழி இறைச்சி, மற்றும் உப்பு, பால்மா, சோயா எண்ணெய் , சவர்காரம் உள்ளிட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையினைபேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை சதொச மற்றும் க்யூ-சொப் ஊடாக குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். வாழ்க்கை செலவுகள் அதிகம் என எதிர்தரப்பினர் மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மாத்திரமே சற்று அதிகமாக காணப்படுகிறது. அதனையும் எதிர்வரும் நாட்களில் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM