(ஆர்.யசி)
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் திடீரென மாற்றியுள்ளதை அடுத்து ஜனாதிபதி,பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளதுடன், இலங்கையின் திடீர் மாற்றம் குறித்து தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் இலங்கையின் தீர்மானத்தை இன்னமும் இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என்பதை அரசாங்கம் கூறியுள்ளதுடன் எதிர்வரும் நாட்களின் இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா - ஜப்பான் கூட்டு முயற்சியில் முதலீடுகளை கொண்டு அபிவிருத்தி செய்ய இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றியுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடனும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடனும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்திப்புகளை நடத்தியுள்ளார். இலங்கையின் அவசர முடிவுகள் குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிய வருகின்றது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 51வீத உரிமம் இலங்கைக்கு 49 வீத உரிமத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் முதலீடுகளை செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இலங்கையுடன் முத்தரப்பு உடன்படிக்கை ஒன்றினை செய்துள்ள நிலையில் அந்த உடன்படிக்கைக்கு அமையவே இதுவரை காலமாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென நாட்டில் எழுந்த துறைமுக தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை அடுத்து அரசாங்கம் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபைக்கே வழங்குவதாகவும், மேற்கு முனையத்தை இந்திய, ஜப்பான் கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது அறிவித்துள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM