பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் - தடையுத்தரவு கோரி தாக்கல் செய்த விண்ணப்பங்கள் ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

04 Feb, 2021 | 05:52 AM
image

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்குத் தடை கோரி சுன்னாகம் பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்துக்கு சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைக் கோரி மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நாளைமறுதினம் வரை ஒத்திவைத்தது.

அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும் நாளை வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தவணையிட்டது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பம் சுன்னாகம் பொலிஸாரால் இன்று பிற்பகல் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

போராட்டங்கள் நடத்தப்படுவதால் கொவிட் -19 சுகாதார நடைமுறைகள் மீறப்படுகின்றனவா? என்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெற்று நாளை வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும் நாளை வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தவணையிட்டது.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் புதன்கிழமை காலை பொத்துவிலில் ஆரம்பமாகி பொலிஸாரின் தடையை மீறி நடைபெற்றுவருகிறது. வரும் நிலையில் 6ஆம் திகதி சனிக்கிழமை பொலிகண்டியை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39