நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 66 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று புதன்கிழமை 711 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 66,409 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 59,883 பேர் குணமடைந்துள்ளதோடு 6,196 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 548 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.