பெங்களூர் கெம்பேகொவ்த சர்வதேச விமானநிலையத்திலிருந்து தங்கத்தை கடத்துவதற்கு முயற்சித்த 7 இலங்கையர்கள் விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்த தங்கத்தின் பெறுமதி 65 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 2 கிலோகிராம் தங்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களது ஆசனவாயிலில் வைத்து கடத்துவதற்கு முயற்சித்த இவர்களில் 6 பெண்கள் அடங்குவதாகவும் அதில் ஒருவர் தங்க வலையல் ஒன்றை தனது தலைமுடியில் மறைத்து வைத்துக்கொண்டு வந்ததாகவும் தெரியவருகின்றது. 

இதேவேளை, குறித்த 6 பெண்களையும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு கொண்டு போய் விடுவதற்காக விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த நபரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், இந்த குழுவினர் சென்னையிலிருந்து மற்றைய ஆசிய நாடுகளுக்கு தங்க கடத்தல் மோசடியில் ஈடுபடும் சர்வதேச குழுவின் ஒரு பகுதியினர் என்றும் தெரியவந்துள்ளது.

கடத்தலில் ஈடுப்படுபவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் மற்றும் விமான டிக்கெட்டுக்கள் அனைத்தும் வழங்கப்பட்டு இந்த கடத்தலுக்காக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது