சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் தலைமையில் அந்நாடு முன்னெடுத்து வரும் தந்திரோபாய திட்டங்களால் சர்வதேச அரங்கில் தவிர்க்க முடியாத ‘பலமான சக்தியாக’ உருவெடுத்துள்ளது.
அண்மைய காலத்தில் சீனா தனது இலக்குகளை நோக்கி முன்னேறிய வழிகளை அவதானிக்கின்றபோது யோசனைகள், ஆராய்ச்சிகள் மற்றும் முக்கிய தொழில்நுட்பகங்கள் ஆகியவற்றை இரகசியமான முறையில் அந்நாடு கைப்பற்றிக்கொண்டமை காரணமாகின்றது.
2020 ஜுலை 7ஆம் திகதி அமெரிக்கா புலனாய்வுத்துறையின் சமஷ்டிப் பிரிவுப் பணிப்பாளர் கிறிஸ்தோபர் வேரே, சீன கம்னியூனிஸ் கட்சியானது ஆராய்ச்சிகளை இலகுவாக கைப்பற்றுவதன் மூலம் ஜனநாயக நாடுகளின் “திறந்த தன்மையை” பயன்படுத்தி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறநாடுகளிடமிருந்து மதிப்பு மிக்க ஆராய்ச்சி மற்றும் முக்கியமான தொழில் நுட்பங்களை கைப்பற்றுவதற்கு சீன கம்னியூனிஸ் கட்சி மற்றும் சீன அரசாங்கம் சில முறைகளைக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக கூறுவதானால், வெளிநாட்டு நிறுவனங்களை இணைவழி ஊடுருவல், ஒத்துழைக்கும் பெயரில் சீனா நாட்டவர்கள் செயற்படுதல், வெளிநாட்டு நிபுணர்களை கவர்ந்திழுத்தல், முக்கியமான தரவுகளை பெறுவதற்காக திட்டமிட்டு சீனாவுடன் தங்கள் தொடர்புகளை மறைக்கும் நபர்களை அனுப்புதல் ஆகியவை காணப்படுகின்றன.
ஜூலை 21, 2020 அன்று, அமெரிக்க நீதித் துறை செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்காவில் உள்ள இரண்டு சீன இணையவழி ஊடுருவிகள் (ஹெக்கர்கள்) அறிவுசார் சொத்துக்கள் மற்றும் இரகசிய வணிகத் தகவல்களை கைப்பற்றுவதை இலக்காகக் கொண்ட உலகளாவிய ஊடுருவல் பிரசாரத்தை நடத்தியுள்ளனர்.
இரண்டு இணையவழி ஊடுருவிகளும் (ஹெக்கர்களும்) சீன அரசாங்கத்தின் உளவுத்துறை, பாதுகாப்பு மற்றும் இரகசிய பொலிஸ் நிறுவனத்தின் குவாங்டாங் மாநில பிரிவுடன் பணிபுரிந்ததாகவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இருவரும் நடத்திய ஊடுருவல் பிரசாரம் பத்து ஆண்டுகளாக நீடித்தும் உள்ளது.
இந்த இரண்டு இணைய ஊருவிகளும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஜேர்மனி, ஜப்பான், லிதுவேனியா, நெதர்லாந்து, ஸ்பெயின், தென்கொரியா, சுவீடன் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த நாடுகளை இலக்காக கொண்டு செயற்பட்டுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் காணப்படும் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய பாதுகாப்பு உதவி அட்டர்னி ஜெனரல் ஜோன் சி.டெமர்ஸின் கருத்துக்களின் பிரகாரம், அமெரிக்க மற்றும் பிற சீன உரிமமல்லாத நிறுவனங்களின் கொரோனா ஆராய்ச்சி உட்பட கடினமாக சம்பாதித்த அறிவுசார் சொத்துக்களைக் கைப்பற்றுவதில் தீராத பசியைக் கொண்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவில் வதியும் சீன குடிமகனான ஹாங்ஜின் டான் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான வர்த்தக இரகசியங்களை திருடுவதில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஹாங்ஜின் டான் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் இணை விஞ்ஞானியாகப் பணிபுரிந்தவர். இவர் ஆராய்ச்சிக்கான குழுவொன்றின் உறுப்பினராக இருந்தார். அந்தக்குழுவானது நிலையான ஆற்றல் சேமிப்பிற்காக அடுத்த தலைமுறை மின்கலத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.
அந்த ஆராய்ச்சி சோதனையின்போது, டான் தனது தலைமை அதிகாரியின் அனுமதி மற்றும் அங்கீகாரமின்றி தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பொருட்களை வேண்டுமென்றே நகலெடுத்து பதிவிறக்கம் செய்துள்ளார். இந்த தகவல்கள் வெளிப்பட்டதை அடுத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது அதனை அவர் ஒப்புக்கொண்டிருக்கின்றார்.
இந்த வழக்கில் ஆஜரான அமெரிக்க வழக்கறிஞர் ட்ரெண்ட் ஷோர்ஸ், டான் போன்ற நபர்கள் அமெரிக்க வர்த்தக இரகசியங்களைத் கைப்பற்றி தமது சொந்த வீட்டிற்கு எடுத்தச் செல்லவே விரும்புகின்றனர். இதனால் சீனா தங்களின் தொழில்நுட்பத்தை மேம்பட்டு பிரதிபலிக்க முடியும் என்று கருதுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், சீனாவின் ஹாவோ ஜாங் என்பவர் பொருளாதார உளவு மற்றும் வர்த்தக இரகசியங்களை கைப்பற்றியமைக்கான குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டார். இந்த விடயம் சம்பந்தமான அமெரிக்க நீதித்துறையின் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 2010 மற்றும் 2015இக்கு இடையில், அவகோ மற்றும் ஸ்கைவொர்கஸ் நிறுவனங்களின் வர்த்தக இரகசியங்களை ஹாவோ ஜாங் இலாவகமாக பெற்றுக்கொண்டிருக்கின்றார்.
அவகோ நிறுவனம் இணையதள மேம்படுத்தல், வடிமைத்தல் மற்றும் சர்வதேச ரீதியான இணையதள விநியோகஸ்தராக செயற்பட்டு வருகின்றது. இது அனலொக், மற்றும் டிஜிட்டல், கலப்பு-சமிக்ஞை மற்றும் இலத்திரனியல் கூறுகள் உள்ளிட்ட துணை அமைப்புகளின் குறைக்கடத்தி வடிவமைப்பு மற்றும் செயலாக்கத்தில் கவனம் செலுத்துகிறது. அதேசமயம், ஸ்கைவொர்க்ஸ் நிறுவனமானது உயர் செயல்திறன் கொண்ட அனலொக் குறைக்கடத்திகளின் கண்டுபிடிப்புக்களைச் செய்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஹாவோ ஜாங்கின் செயற்பாடு தொடர்பில் நீதிபதி, அளித்துள்ள தீர்ப்பில், ஜாங் சீன அரசாங்கத்தின் நலனுக்காக இரகசியங்களைத் கைப்பற்றியுள்ளார். இது பல ஆண்டுகளாக நடைபெற்றிருக்கின்றது. உள்நாட்டில் உயர் செயல்திறன் கொண்ட குறைக்கடத்திகளை உருவாக்க சீனா முயற்சித்தது. ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது. இதனால் இவ்வாறு அமெரிக்க இலத்திரனியல் நுட்பத்தினை கையகப்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
அதேநேரம், இந்த வழக்கில் தொடர்புடைய கலிபோர்னியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் டேவிட் எல்.அண்டர்சன், “சுதந்திரம் இல்லாத நாடுகளால் புதுமைகளை உருவாக்க முடியவில்லை. அவை புதுமைப்படுத்தத் தவறும் போது, அவர்கள் திருடுவதற்கு முயல்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
இதேநேரம், மிக அண்மையில் சீன உளவுத்துறையின் மானிய மோசடி குற்றச்சாட்டில் அமெரிக்காவில் பேராசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார். இது குறித்து ஜனவரி 14ஆம் திகதி வெளியான அமெரிக்க நீதித் துறையின் செய்திக்குறிப்பின் படி, அமெரிக்க எரிசக்தித் துறைக்கு சீன அரசாங்கத்திடமிருந்து ஒப்பந்தங்கள், நியமனங்கள் மற்றும் விருதுகளை வெளியிட கேங் சென் தவறிவிட்டார் என்று உள்ளது.
மேலும், கேங் சென் ஒரு வெளிநாட்டு வங்கி கணக்கு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தவறியதாகவும், வரிவிதிப்பில் தவறான அறிக்கையை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த வெளியிடப்படாத அறிக்கையின்படி, கேங் சென் வெளிநாட்டு நிதியில் 29 மில்லியன்களைப் பெற்றுள்ளார். சீனாவின் தெற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்து அந்த நிதி கேங் சென்னுக்கு வந்திருக்கின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த ஆண்டு பெப்ரவரியில், அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் வொஷிங்டனில் மாநாடொன்றில் பங்கேற்றிருந்தனர், இதன்போது “அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறையிலிருந்து சீனா அறிவுசார் சொத்துக்களை கையகப்படுத்தியது” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு உதவி அர்ட்டனி ஜெனரல் ஜோன் டெமர்ஸ், “சீனாவிலிருந்து வரும் அச்சுறுத்தல் ‘உண்மையானது’, ‘விடாப்பிடியாக’, ‘நன்கு திட்டமிடப்பட்ட’, ‘நன்கு வளர்க்கப்பட்ட’, எப்போது வேண்டுமானாலும் விலகாது இருக்கும் ஒரு விடயம்” என்று கூறினார்.
மேலும் எம்.பி.ஐ.யின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் வேரே “ஆராய்ச்சி, வர்த்தக இரகசியங்கள், தொழில்நுட்பம் மற்றும் முக்கிய தரவுகளை கையகப்படுத்தும் சீனாவின் அச்சுறுத்தல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மிகப்பெரியதும் நீண்டகால ஆபத்துகளிலும் ஒன்றாகும்” என்று கூறினார். அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை சீனா திருட முயன்றது தொடர்பாக சுமார் ஆயிரம் வழக்குகள் மாநாட்டின் போது பரஸ்பர கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.
மேலும் கிறிஸ்டோபர் வேரின் கூற்றுப்படி, பீஜிங் முக்கியமான இலக்கு பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதோடு இவ்வகையான விடயங்களை கையகப்படுத்துவதற்கு ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்ட திட்டத்தை கொண்டுள்ளது. புதுமையான தரவுகளை இலக்கு வைப்பதோடு மட்டுமல்லாமல், மிகப்பெறுமதியான தரவுகளையும், உள் மூலோபாய ஆவணங்களையும் பெறுவதில் ஆர்வம் கொண்டுள்ளது.
சீனாவின் இத்தகைய கையகப்படுத்தும் திட்டங்கள் பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டவை, குறிப்பாக கூறுவதானால் அவை விவசாயத்திலிருந்து காற்றாலை விசையாழிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வரை மற்ற பல்துறைகளையும் இலக்கு வைத்ததாக உள்ளது.
சீனாவின் இந்த கட்டமைக்கப்பட்ட திட்டத்தில், கல்வித்துறை விதிவிலக்கல்ல. கடந்த ஆண்டு ஜனவரியில், ஹவாட் பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் துறையின் தலைவர் சீன அரசாங்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததற்காகவும், தவறான, கற்பனையான மற்றும் மோசடி அறிக்கையை வெளியிட்டதற்காகவும் கண்டறியப்பட்டிருக்கின்றார்.
இதனால் அமெரிக்க அரசாங்க மானியங்களுடன் ஹவாட் பல்கலைக்கழகத்தல் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஆய்வுகள் மற்றும் மேம்பட்ட தகவல்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசாங்கத்தின் கைகளுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள்.
சீன அரசாங்கத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக கூறப்படும் ஹூவாவி தொலைபேசி நிறுவனமானது, ஏற்கனவே ஆறு நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பத்தைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீன தொலைத் தொடர்பு நிறுவனம் ஏற்கனவே பல நாடுகளால் ஒரு தேசிய பாதுகாப்பு அபாயமாகக் கருதப்படுகிறது, மேலும் இந்த நிறுவனம் சீன அரசாங்கத்துடன் முக்கியமான தரவுகளைப் பகிர்ந்து கொள்ளும் என்ற அச்சத்தின் காரணமாக பல அரசாங்கங்களில் 5 ஜி நிறுவல் திட்டங்களில் இந்த நிறுவனம் பங்காளியாக இருப்பதற்கு தடைகளை விதித்துள்ளன.
2000களின் முற்பகுதியில் ஹூவாவி நிறுவனம் மீது அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாக நகலெடுத்தமை தொடர்பில் வழக்குத் தொடர்ந்த் நிறுவனங்களில் ‘சிஸ்கோ சிஸ்டம்ஸ்’ என்பது முதன்மையானதொன்றாகும். 2004ஆம் ஆண்டில் சிகாகோவில் நடந்த ஒரு வர்த்தக கண்காட்சியின் போது, ஹூவாவி ஊழியர் நள்ளிரவில் போட்டி நிறுவனத்தின் சாவடிக்குச் சென்று வலையமைப்புச் சாதனத்திற்குள் சுற்றுப்பாதையின் படங்களை எடுப்பது கண்டறியப்பட்டது என்றும் ‘த பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை ஒரு ‘துரதிர்ஷ்டவசமான தவறான புரிதல்’ என்று ஹூவாவி அப்போது குறிப்பிட்டிருந்தது.
அண்மைய ஆண்டுகளில், சீனாவின் வளர்ச்சி மற்றும் செழிப்பு, அதன் கடின உழைப்பு அல்லது கண்டுபிடிப்புகளால் தூண்டப்படவில்லை, ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய நாடுகளின் வளர்ச்சியால், புதுமைகளை உருவாக்க முடியாமல், பல ஆண்டுகளாக காலத்தினை செலவழித்து வந்திருந்தனது. இருப்பினும் வெளிநாட்டு நிறுவனங்களின் யோசனைகள், ஆராய்ச்சி மற்றும் தரவு மற்றும் அவர்களின் யோசனைகளை வளர்ப்பதற்கு கணிசமான அளவு முயற்சிகள், நிதிப்பங்களிப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து திட்டங்களை தனது கைக்குள் கொண்டு வந்திருக்கின்றது.
சுதந்திர உலகத்தின் திறந்த தன்மையை சீனா தனது நன்மைக்காக கட்டாயப்படுத்தவும், கையாளவும், ஊக்குவிக்கவும் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், சீனா தனது சந்தைகளையும் பொருளாதாரத்தையும் வெளி உலகிற்கு மூடி வைத்திருக்கிறது. ஆனால் சீனாவின் தன் நலன் சார்ந்த கையகப்படுத்தும் நடைமுறைகள் மற்றும் அதன் பிற்போக்குவாத தந்திரோபாயங்கள் குறித்து உலகம் தற்போதே அறிந்திருக்கிறது. இதனால் சீனா பல முனைகளில் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
தென்சீனக் கடலில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு துருக்கியில் உய்குர் சிறுபான்மையினரை துன்புறுத்தியமை, அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளமை என்ற விடயங்களுக்கு அப்பால் இப்போது ‘கையகப்படுத்தும் நாடு’ என்ற பட்டத்தினையும் வென்றுள்ளது.
(தமிழில்:ஆர்.ராம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM