அனைவரும் விண்வெளிக்கு பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்வெளி வீரர்கள் அல்லாத சாதாரண மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டம் தொடர்பான அறிவிப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிரகன் குறுங்கலத்தில் அனுபவம் வாய்ந்த பைலட் ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 நபர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பூமியை சுற்றி வருவார்கள். இந்த திட்டத்துக்கு இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு செல்லும் இந்த 4 பேருக்கும் போல்கன் ரொக்கெட் மற்றும் டிரகன் குறுங்கலத்தில் தேவையான பயிற்சியும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினால் விண்வெளி செல்ல வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களின் கனவு நிறைவேறும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.