பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காணாமல் ஆக்கப்பட்ட பலநூறு உறவுகளின் குழந்தைகள், உறவினர்கள் படும் வேதனை சுமந்த வாழ்வுக்கு விடிவேண்டும் என பல நாட்களாக நடாத்திவரும் போராட்டம் இன்று சகல பேதங்களுக்கும் அப்பால் மக்கள் ஜனநாயக எழுச்சிப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
நாட்டில் ஆக்கிரமிப்புகளும் அடக்குமுறைகளும் நீண்டு செல்கின்றது. இதற்கு தீர்வு வேண்டி இன்று மக்கள் எழுச்சிப்போராட்டமாக உருவெடுத்துள்ளது. இத்தகைய போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழு ஆதரவை வழங்கி நிற்கின்றது.
பிரிக்கப்படாத தொப்புழ் உறவோடு வாழும் எம் இனத்தின் துயரவாழ்விற்கு நீதி கிடைத்து எதிர்கால சந்ததியாவது நிம்மதியாக வாழ்வதற்கு வழியேற்படவேண்டும். என்பதற்காக ஒட்டுமொத்த ஆசிரியச்சமூகமும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM