பிக்பாஸ் 4வது சீசனில் அனைவராலும் பேசப்பட்ட மிக முக்கிய பிரபலமே பாலாஜி முருகதாஸ். இவரின் தந்தை முருகதாஸ் காலமாகியுள்ளார். 

பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனது அப்பா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் போதையில் இரவில் அடிப்பார் எனவும், தனக்கு நல்ல குடும்பம் அமையவில்லை எனவும்அடிக்கடி கூறிவந்தது அனைவருக்கும் அறிந்ததே.

பிக்பாஸ் 4 இறுதி நிகழ்வில், அவருக்கே இரண்டாவது இடம் கிடைத்தது. ஆரம்பத்தில் கோபப்பட்டு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், இறுதிக்கட்டத்தில் பொறுமையாக அனைத்தையும் சமாளித்து ரசிகர்களை கவர்ந்தார். தனக்கு இரண்டாவது இடம் கிடைத்ததே பெரிய விஷயம் தான் என அவர் வெளிப்படையாகவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது பாலாஜியின் அப்பா முருகதாஸ் திடீரென மரணம் அடைந்துள்ளமையால், பாலாஜி கண்ணீருடன் இருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இது குறித்து பாலாஜி, ‘இதுவும் கடந்து போகும்’ என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.