தனது 72 ஆவது வயதில் காலமான பிரபல சிங்கள நடிகர் விஜய நந்தசிறிவுக்கு இலங்கையின் பிரபலங்கள் பலர் தனது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன : பிரபல கலைஞர் நந்தசிறியின் மரணம் அதிர்ச்சியளிப்பதோடு கவலைiயும் ஏற்படுத்தியுள்ளது. இவரின் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கின்றேன்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க : நந்தசிறியின் இறப்பு இலங்கையின் கலைத்துறைக்கும் சினிமாவுக்கும் ஏற்பட்ட பாரிய இழப்பாகும். இவரின் துயரால் வாடும் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன். 

முன்னாள் ஜபாதிபதி மஹிந்த ராஜபக்ஷ: பிரபல நடிகர் ஒருவரை இன்று இழந்துள்ளோம். மிகவும் வேதனையாக உள்ளது. இவரின் ஆத்தா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் : நம் அனைவரையும் மெய்மறந்து சிரிக்க வைத்த சிறந்த நடிகர் நந்தசிறியின் இறப்பு கவலையாக உள்ளது. இவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார : ஆளுமையும் திறமையும் நிறைந்த மிகப்பெரிய நடிகரை இழந்துள்ளோம். எங்கள் அன்போடும் மரியாதையுடனும் உங்கள் ஆன்மா சாந்திடையட்டும். 

நாமல் ராஜபக்ஷ எம்.பி. : எனது ஆழ்ந்த அனுதாபங்களை நந்தசிறி குடும்பத்தினருக்கு தெரிவித்து கொள்கின்றேன். நந்தசிறி நமக்காக பல முக்கிய நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். 

இலங்கை அணியின் வீரர் சாமர கப்புகெதர : சந்தசிறியின் மரணம் அதிர்ச்சியளக்கின்றது. அவர் உயிருடன் வாழும் போது எம்மை சந்தோசம் படுத்தினார். ஆனால் இன்று அவருடைய பிரிவு எம்மை அழவைத்துள்ளது.

இலங்கை அணியின் வீரர் பர்வீஸ் மஹ்ரூப் : என்னுடைய உறவினர் நந்தசிறியின் பிரிவு கவலையாக உள்ளது. வாழ்க்கை முழுவதும் சிறந்த நினைவுகளை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி.