நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தவிர்க்க முடியாது: இரா.சாணக்கியன்

Published By: J.G.Stephan

03 Feb, 2021 | 11:43 AM
image

நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தவிர்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை 03.02.2021)முதல் எதிர்வரும் சனிக்கிழமை 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், இந்த தொடர் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவினை அண்மையில் வழங்கியிருந்தது.

சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்த பேரணி  ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மீண்டும் மக்கள், இளைஞர்களுக்கு விடுத்துள்ள அழைப்பிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நாட்டில் எத்தனையோ போராட்டங்கள், நிகழ்வுகள், ஏன் அரசின் நிகழ்வுகள் கூட கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால் தமிழ் மக்கள் தங்கள் உரிமை தொடர்பான விடயங்களுக்காகப் போராட்டம் நடத்தும் போது மாத்திரம் கொரோனாவும், நீதிமன்ற உத்தரவுகளும் வருகின்றன. இது தான் இந்த நாட்டின் தலைவரின் ஒரே நாடு ஒரே சட்டம்.

அரசின் இவ்வாறான பாரபட்சம் காட்டும் அடக்குமுறைக்கு எதிராகவுமே இன்று இந்தப் போராட்டம் பொத்துவில்லில் ஆரம்பிக்கப்படுகின்றது. நாங்கள் அதற்குத் தயாராகியுள்ளோம், எமது மக்களுக்காக எத்தடையையும் உடைக்கத் தயாராகவுள்ளோம்.

எனவே இதற்கு எமது மக்கள், குறிப்பாக இளைஞர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும். இது எமது உரிமைக்கான போராட்டம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-07-15 06:35:23
news-image

வியாபாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது பிறிதொரு...

2024-07-14 21:25:06
news-image

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டியை மோதிவிட்டு தப்பிச்...

2024-07-14 21:19:43
news-image

திருகோணமலையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்...

2024-07-14 21:24:24
news-image

கிளிநொச்சியில் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் !

2024-07-14 21:25:27
news-image

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்...

2024-07-14 21:27:47
news-image

வட்டுக்கோட்டையில் பத்து போத்தல் கசிப்புடன் பெண்...

2024-07-14 17:46:06
news-image

முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற முதியவர்...

2024-07-14 17:17:42
news-image

மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை...

2024-07-14 17:24:08
news-image

தீகவாபி தூபியில் நினைவுச் சின்னங்கள், பொக்கிஷங்கள்...

2024-07-14 17:28:57
news-image

எதிர்க்கட்சி தலைவருக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்...

2024-07-14 17:53:32
news-image

1700 ரூபாய் சம்பளம் வழங்குமாறு கோரி...

2024-07-14 16:29:28